Thursday, May 7, 2009

போட்ட போடுகள் 1

http://truetamilans.blogspot.com/2009/05/blog-post.html
Ginger said...
இலங்கை பிரச்சினை 60 வருடங்களாக எரிகிரது; 1983 முதல் கொழுந்து விட்டெரிகிரது. 83 முதலே தமிழ்நாட்டில் தமிழீழத்துற்க்கு சார்பாக பல போராட்டங்கள் நடந்துள்ளன. ‘இன உணர்வை’ சினிமா காரர்கள் புகட்டவே வேண்டாம். ஏர்கெனவே நிரைய இருக்கு. 30 வருடங்களாக நடத்திய நூற்றுக் கணக்கான போராட்டங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகள் முதலியவை சாதிக்காததை, எப்படி சினிமா கூட்டம் சாதிக்க போகிறது. அப்படி 30 வருட போரட்டங்கள், ஒன்றும் சாதிக்காவிட்டால், நம் தவறுகள் என்ன என்று யாரும் அலசினதாக காணோம். தமிழர்கள் 30 வருட வரலாற்றிலிருந்து, தங்கள் அனுபவங்களிடமிரிந்து ஒன்றும் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. ஈழப்போர் ஸ்ரீலங்க அரசுக்கும், புலிகளுக்கு இடையே நடக்கின்றது. (மற்ற ஈழப் போராளிகள் புலிகளீனால் அழிக்கப் பட்டுள்ளார்கள்). இதில் ஓரளவுக்கு மேல் வெளீநாடவர்கள் - இந்தியர்களையும் சேர்த்து- ஒன்றும் செய்ய முடியாது. புலிகள் முன்னணியில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் தோல்வியும், அழிவும் ஏர்பட்டுள்ளது. புலிகள் சீக்கிரம் ஒழிந்தால் தான் தமிழர்கள் வேறு திசைகளில் போராட்டத்தை நடத்த முடியும். புலிகள் முன்னணியில் தமிழர்கள் தோல்வி மேல் தோல்விதான் போடுவார்கள். ஜிஞ்ஜர்

document.write(tamilize('Monday, May 04, 2009 5:44:00 PM'))
திங்கள், மே 04, 2009 மாலை 5:44:00

=================
Ginger said...
உ.த. சொல்றார் ”ஜிஞ்ஜர்.. புலிகளுக்காக அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ஈழப் பகுதியில் தமிழ் மக்கள் குடியேறவிடாமல் செய்து நாடற்றவர்களாக ஆக்குகின்ற நயவஞ்சகத்தை ராஜபக்சே அரசு செய்து வருகின்றது.. இது சுத்தமாக ஒரு இனத்தையே அழிப்பதற்குச் சமம்.இந்த நேரத்தில் புலிகள், ஆதரவு, எதிர்ப்பு என்றெல்லாம் பேசி நமது நேரத்தையும், உழைப்பையும் வீணாக்க வேண்டாம். ஒருமித்தக் குரலில் எதிர்ப்போம்.. வாருங்கள்”உ.த. இன அழிப்பு என்பது இப்போதுதான் கண்டுபிடித்தால் போல நினைக்கின்றீர்கள். அது 60 வருட சமாசாரம். கடந்த 5 மாதங்களாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு புலிகளின் ராணுவ தோல்வியினல் ஏற்பட்டுள்ளது. ஏன் ஈழ ஆதரவு கூட்டங்கள் பிரபாகரன் படத்தை வைக்கின்றன? ஏன் ஈழ ஆதரவு கூட்டஙகள் புலி கோடியை தூக்கிக் கொண்டு ஓடுகிரன? ஏன் வழக்கறிஞர்கள் பிரபாகரன் பிறந்த நாளை உயர்நீதி கட்டிடத்தில் ‘கொண்டாடினர்’?. தமிழ் நாட்டில் ஈழ மக்கள் அபிலாஷைகளுக்கு ஒரே காவலாளி பிரபாகரனும், புலிகளும் என்ற எண்ணத்தை பல அரசியல் கட்சிகள் முக்கியமக திராவிட கட்சிகள் ஊக்குவிக்கிறன. அது இன்னும் நடக்கின்றது. உதாரணமாக, பெரியார் திராவிடர்கள் மிலிடரி லாரிக்களை உடைக்கும் போது புலிக் கொடியை வீசினர். அதனால் நீங்கள் நினைக்கும் போல் புலிகள் எதிர்ப்பை தெரிவிப்பது வீண் இல்லை. மேலும் புலிகள் ஆதரவாளர்கள் தான் 5 மாத கொந்தளிப்பின் பின் நின்று இயக்கி உங்களைப் போல அப்பாவிகளை பேச வைக்கிரனர்.கடந்த 5 மாத புலிகளின் சமரகள தோல்விகளுக்கு முன்னாடியே, ஈழத் தமிழர்கள் பெரும் அளவில் அரசியல் சக்தியையும், உரிமைகளையும் இழந்து விட்டனர். இலங்கையில் எவ்வளவு மோசமாக தமிழ மக்கள் மக்கள் தொகையும், அரசியல் பலமும் இழந்து விட்டனர் என்பதை, இலங்கை தமிழரான டி.பி.ஸ்.ஜயராஜ் கட்டுரையில் படிங்கள்.http://dbsjeyaraj.com/dbsj/archives/113முதலில் இலங்கை தமிழர் ஜனத்தொகை 20 லட்சமாக இருந்தது. மேற்கு மாகாணங்களில் ஒரு 90% சதவீதமாகவும், கிழக்கு மாகாணங்களில் 60% சதவீதமாகவும் இருந்தது. 50 வருட சிஙக்ள பேரின வாத கொளகைகளாலும், 5 லட்சம் தமிழர்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாய் சென்றதாலும், மற்ற 5 லட்சம் தமிழர்கள் சிங்கள் பிரதெசங்களுக்கு அகதிகளாய் சென்றதாலும், இன்னும் 1 லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவம்- புலிகள் போராட்டத்தில் மாண்டதாலும் இப்போது வடகிழக்கு மாகானங்களில் தமிழர்கள் ஜனத்தொகையும், சதவீதமும், பெரிதாய் குறைந்துள்ளது. ஜயராஜ் கணக்குப் படி கிழக்கில் தமிழர் சதவீதம் 5% மேலிருக்காது போல் உள்ளது. மேற்கிலும் மிகவும் குறைந்துள்ளது. இன அரசியல் உரிமைகள் இன ஜனத்தொகையிலும், சதவீததித்லும் தான் உள்ளன. அது 5 மாதம் முன்னாடியே நடந்து விட்டது. அதற்கெல்லாம், புலிகளும், அதன் ஆதரவாளர்களும் பெரும் பொருப்பு வகிக்கிறார்கள். இப்போதும் கூட அரசியல் முட்டாள்களான திராவிட கட்சிகள் தலைமையில் புலிகள் ஆதரவுதான் நடக்கிறது. முள்ளீ வாய்க்கால் பகுதியில் புலிகள் தங்களை காப்பாற்றி கொள்ள 2 லட்சம் தமிழர்களை துப்பாக்கி முனையில் சுற்றிவைத்து, மேலும் அப்பாவி மக்கள் சாவுகளீனால் தங்களூக்கு ஆதரவு பிரசாரத்தை தேடுகிறாற்கள். என்னே இனப் பற்று. தமிழ் நாட்டில் இவ்வளவு போராட்டங்கள் நடக்கின்றனவே, இதில் எவருக்காவது புலிகளின் மீது, அப்பாவி மக்களை போக விடுங்கள் என்ற கோரிக்கை வைக்க விவேகமோ, திராணியோ இருந்ததா. உங்களுக்கு தான் அந்த திராணி இருக்கின்றதா. ஈழ மக்களை காப்பாற்ற வேண்டுமென்றால் கோரிக்கைகள் புலிகளின் மீதும், பிரபாகரன் மீதும் வைக்க வேண்டும், அதில்லாமல் இந்திய, தமிழக அரசாங்களையும், உலகத்தையும் வசை பாடுவது இன்னும் அழிவை இழுத்துக் கொண்டு செல்வதாகும்.ஈழ மக்கள் அழிவில், பொருப்பற்ற தமிழக அரசியல் வாதிகளூக்கும் பங்கு உண்டு. அதே சிந்தனைய்ற்ற, விவேகமற்ற, பொருப்பற்ற மனப்பான்மை தான் இன்றைய ஆர்பாட்டங்ஜ்களூக்கும் காரணம்ஜிஞ்ஜர்

document.write(tamilize('Tuesday, May 05, 2009 2:20:00 PM'))
செவ்வாய், மே 05, 2009 மதியம் 2:20:00

===========================================
Ginger said...
'வெண்காட்டான் said... ginger, in this hard time ppl against LTTE are more worried about the increasing support of LTTE than tamil ppls lives. Y? so you are more worried about it. u dont care about tamils.வெண்காட்டான், இப்படி புலிகளுக்கு எதிரானவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள் என சொல்லி, சொல்லியே, மற்றவர்கலை அழி தமிழர்களை அழித்து ஒன்றும் ஆக்கப் பூர்வமாக செய்யாமல் புலிகள் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். தோல்விகளிலிருந்து, ஒன்றும் கற்றுக் கொள்ளாதர்வர்கள் என்ன பிறப்பு. தமிழ்நாட்டில் 35 வருடங்களாக எல்லா அரசியல்வாதிகளுக்கும் இலங்கை கொடூரங்கள் தெரியும், அபப்டி இருந்தும் ஏன் ஒன்றும் செய்யவில்லை, ஏன் செய்யமுடியவில்லை, என உங்களையே கேளுங்கள். புலிகளின் மீது கண்மூடித்தனமான நம்பிக்கையால்தான், தமிழக அரசியல்வாதிகள் ஒன்றும் புடுங்க முடியவில்லை. அதே ஆட்கள் போராட்டத்தின் முன்னணியில் நின்றால், ஒன்றும் செய்ய முடியது. ஏன் புலிகளை தவிர மற்ற இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் புலிகளை நசுக்குவதில் ஆதாரம் கொடுக்கின்றனர், ஏன் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து தப்பித்து இலங்கை அரசு ராணுவத்திடன் புகல் செய்கின்றனர் என கஷ்டமான கேள்விகளை கேட்டு சிந்தியுங்கள். தமிழகத்தில் உணர்சி கடலை ஊட்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் லாபம் அடைகிறனர். அந்த அரசியல் சூழ்ச்சிகளில், வலைகளில் விழாமல் இருப்பது, சாமன்யர்களுக்கு நன்று.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 3:33:00 AM'))
புதன், மே 06, 2009 இரவு 3:33:00

===============================================
Ginger said...
'உண்மைத் தமிழன்இப்போது கேள்வி புலிகளா தமிழ் ஈழத்து மக்களாக என்றில்லை.. ஈழத்து விடுதலை கிடைக்க வேண்டும் என்பதுதான்..இதில் புலிகள், மக்கள் என்று நீங்கள் பிரித்துப் பார்ப்பது விடுதலையை இன்னும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு கொண்டு போய் விடும்..'உ.த., ஈழத்து விடுதலையை கேட்பது, ஈழத்து மக்களின் பொருப்பு, அவர்கள் இஷ்டம். தமிழ்நாட்டவர் ஈழத்தின் விடுதலையை ‘கேட்பது’ நடக்காத காரியம். ஏனெனில் யாரிடம் கேட்பது? சுதந்திர ஈழம் 1980ல் சாத்தியம் இல்லை. ஏனெனில் அண்டை வல்லரசான இந்தியா அண்டைநாடான ஸ்ரீலங்காவை துண்டிக்க ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஈழவர்களுக்கு கைக்கெட்டக் கூடிய மிக நல்ல விஷயம் மாநில சுயாட்சி, மேற்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு. இந்திய சமாதானப்படை உள்ளீட்டினால் ஈழவர்களுக்கு அது கிடைத்தது. அதைப் புலிகள் மறுத்து இந்தியாவுடன் சண்டை செய்து , தங்களையும் ஈழவர் எதிர்காலத்தையும் விரயம் செய்தார்கள். இந்தியாவும் இது என்ன தொந்தரவு என ஈழ விவகாரங்களிரிந்து, கை கழுவி விட்டது. இப்போது 1990 சுயாட்சி சான்ஸும் க்ளோஸ். அதற்கு பிறகு 70000 மக்கள் இறந்தனர். 10 லட்சம் மக்கள் அகதிகளாக சென்றனர். இன்றைக்கு ஈழவர் தங்கள் செல்வாக்கையும், பலத்தையும் மொத்தமாக இழந்து நிற்கின்ரனர். இனிமேல் 1990 வகை அரசியல் வாய்ப்பு வருவதும் சைக்கெட்டாததுதான். சிலர் அதிர்ஷ்டம் தன் வீட்டு கதவை தட்டி கைகொடுத்தாலும், அதை துப்பி துரத்துகிறவர். புலிகள் அப்பேர்பட்ட ஜாதி. பழைய ஈழ பிரதேசங்களில் தமிழ் மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டது. இனிமேல் ‘இன உரிமை’ கைக்கெட்டாதது. தமிழ்நாட்டில் இருந்து ஈழ சுதந்திரத்தை பற்றி பேசுவது, மடத்தனத்தின் சிகரம். 35 வருட தோல்விகள் போதாதென்று, இன்னும் 35 வருட தோல்விகளை காண்பீர்.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 2:16:00 PM'))
புதன், மே 06, 2009 மதியம் 2:16:00

=====================================
Ginger said...
வெண்காட்டான்எழுதினால் தமிழில் எழுதுக அல்லது ஆங்கிலத்தில் எழுதுக. தமிழை ஆங்கிலத்தில் எழுதினால் 2, 3 வார்த்தைகளுக்கு மேல் படிப்பது கஷ்டம்.“piraku enna myrukka anithu iyakkangalukkum training kuduthathu. pls makkalai muttal aaka vendam. ore poooiiyai solli sollai poiiyai unmai akka vendam. appothu illatha sri lankavin iraiyaanmai ippa mattum inthiya veliuravu kolkai vakupalarkaluku eppadi vanthatu? sila velai naan sollavathu pooiyaka irukkalam. ithai ungalal pooi endu solla mudiyuma? piriviai aatharikka vittal oru naattin puratti padaiku arms training valanguvathu sariya? appadi endal pakistan kasmir poorathakarakaluku training kodupathu sariya?வெண்காட்டான், நீங்கள் கேட்பது சரியான கேள்விகள். இந்திரா காந்தி அரசு புலிகள் மற்றும் இதர ஈழப் படைகளுக்கு புகலிடம் கொடுத்தது. ஓரளவு ஆயுத பயிர்சியும் கொடுத்த்து. ஏனெனில் பல வருடங்களுக்கு இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை எப்படி இந்திய அரசு சமாளிக்க வேண்டும் என தீர்மானமாக இல்லை. அதற்கு முன் 30 வருடங்களாக இலைங்கை தமிழர் சத்யாகிரக- அமைதி அரசியலில் ஈடுபட்டும் சிங்கள பேரினவாதத்தினால் மேலும் மேலும் உபாதை பெற்று வந்தனர். அது உலகறிந்த விஷயம். அதனால் ஓரளவு இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு செல்லம் கொடுத்து வந்தது. ஆனால் அதனால் இந்திய அரசு இலங்கையை இரண்டாக துண்டிக்க விரும்பியது என்பது செல்லாது.ஏனெனில் இலங்கை அரசு இந்தியா அரசுக்கு எதிரியாக கருதவில்லை. கடைசியாக இந்தியா இலங்கையை மிரட்டி தன் ”அமைதி” ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு சாதகமாக இலங்கை சட்டத்தையே மாற்றியது. புதிய ஷரத்துகளின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஓரளவு சுயாட்சி பெற்றன. மேலும் ஒரு மக்கள் ரெஃபரெண்டம் கிழக்கு-மேற்கு மாகாணங்கள் ஒன்றாக சேர்வதை தீர்மானிக்கும். இது புலிகளுக்கு பிடிக்கவில்லை. ஏன்? இந்தியா திட்டம் படி புலிகளை தவிற மற்ற ஈழப் போராளிகளையும், அரசியல்வாதிகளையும் இந்த ஏற்பாட்டில் இருப்பார்கள். புலிகளுக்கொ தாங்கள்தான் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகள். மேலும் இந்திய திட்டம் சுதந்திர ஈழத்தை கொடுக்க வில்லை. அதனால் இந்திய ராணுவத்துடன் மோதத் தொடங்கினர். இதை விட சிங்கள அரசுக்கு பெரிய உதவி தேவையில்லை. சிங்கள அரசு ஈழப்போராளிகளை இந்தியாவின் செல்லப் பிள்ளை என கருதியிரிந்தது. புலிகள் இந்தியாவுடன் சண்டை போட்டதால், இலங்கை அரசு புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி இன்னும் போர் செய்ய தூண்டியது. இந்தியா அரசுக்கு இலங்கை அரசின் நய வஞ்சகம் தெரியாது என்பதல்ல். ஆனாலும்,உங்கள் நடுவிலே அமைதி கொடுக்கதான் வந்தேன். சண்டை செய்ய அல்ல என சொல்லி, இலங்கயிலிருந்து விலகி ஈழப் போராட்டாத்திலிருந்து கை கழுவிக் கொண்டது. ஈழ உரிமை போரட்டங்கக்கு Strategic Asset இந்தியாவின் நல்லிணக்கமும், துணையும் தான். அதை தூக்கிப் போட்டு, இலங்கை அரசோடு புலிகள் சல்லாபித்தார்கள். அரசனை நம்பி புருசனை கைவிட்டார்கள். இந்த தப்பு போதாதென்று ராஜீவ் காந்தியையும் (30 அப்பாவிகளுடன்) கோரமாக கொலை செய்தனர். அதனால் இந்திய அரசின் பரம எதிரித் தனத்தை சம்பாதித்தனர். இலங்கை அரசுக்கு புலிகள் போல இருக்கும் எதிரி ஒரு வரப்பிரசாதம். அதைப் போல எதிரிகளைக் கொண்டு, இலங்கை அரசுக்குக்கு நண்பர்களே வாண்டாம்.தன் பலங்களை தானே அழித்துக் கொண்டு, மற்ற தமிழர்களையும் தானே அழித்துக் கொண்டு வேறு எந்த எதிரி செயல்படுவான். (இலங்கை) பிரிவை ஆதரிக்காவிட்டால் ஏன் ஆயுத பயிர்சி இந்திய அரசாங்கம் கொடுத்தது என்பதற்கு பதில் அ.இந்திய அரசுக்கு இலங்கை பிரச்சினைகளை எப்படி அணுகுவது என்பது தெளிவாக இல்லை ஆ.ஓரளவு தமிழக மக்கள் உணர்சியை சமாதானப் படுத்த வேண்டியிருந்தது. 1987ல், இந்திய அரசு ஈழ் சுயாட்சியில் தெளிவாக இருந்தது. அதை புலிகள் இலங்கை அரசு உதவியுடன் தோல்வி அடைய செய்தனர். 1991ல், மறுபடியும் இந்திய அரசுக்கு தெளிவு இருந்தது - அதாவது இலங்கையிலிருந்து கை கழுவு. 1992(ராஜீவ் கொலைக்குப் பிறகு) ல் இருந்து மற்றொரு தெளிவு இருந்தது - புலிகளை ஒழிக்க வேண்டும். அது இது வரை தொடருகிரது.பாகிஸ்தான் - இந்தியா போன்ற பெரிய பிரச்சினைகளுக்கு போகாதீர்கள். வந்த சந்தர்பங்களை தூக்கி எரிந்து விட்டு , யோக்கியன் போல் மற்றவர்களை தூற்றுவது விவேகமல்ல. மேலும் சர்வ தேச உறவுகளிலும், சம்பவங்களிலும் நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். சந்தர்பங்களை தனக்கு சாதமாக பயன் படுத்தாவிட்டால் உலகை குறை சொல்லி பிரயோசனம் இல்லைஜிஞ்ஜர்

document.write(tamilize('Wednesday, May 06, 2009 11:07:00 PM'))
புதன், மே 06, 2009 இரவு 11:07:00

==========================================
Ginger said...
வெண்காட்டன்மறுபடியும் ஓவரா தமிழை ஆங்கிலத்தில் எழுதி கஷ்டப் படித்திவிட்டீர்கள். உங்கள் மனநிலை புலிகளின் மனநிலைதான். அதாவது எல்லா விஷயத்திலும் All or nothing. மற்றவர்கள் புலிகள் திருப்தியாகும் வரை உதவிசெய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் அவர்கள் துரோகிகள். துரோகிகளுக்கு புலிகள் என்ன தண்டனையும் வழங்கலாம். உலகமே புலிகளின் குறிக்கோள்களுடன் ஒத்து உழைக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் எதிரிகள், எதிரிகளுக்கு வேண்டிய தண்டனைகள் வழங்கப் படும். இந்த Self-centered, intolerant மனப்பான்மையால்தான் அவர்கள் கெட்டது - மிக உக்ரமான கட்டுப்பாடும், வீரமும் இருந்துகூட.உலகத்தில் எந்த விடுதலை இயக்கமும் சர்வதேச நிலையை சாதகப் படுத்திதான் முன்னுக்கு வர முடியும். கடந்த 20 வருடங்களாக வெற்றி பெற்ற ஒரே ஒரு விடுதலை இயக்கம் கோசோவோ இயக்கம் தான். அவர்கள் அமெரிக்க, ஐரொப்பிய ஆதரவை வளர்து, அதன் மூலம் செர்பியா எதிராக வெற்றி பெற்றர்கள். உலகத்தின் மற்ற எல்லா விடுதலை இயக்கங்களும் தோல்விதான் அடைந்துள்ளன. புலிகளும், ஈழ விடுதலை இயக்கங்களும் மிக்க சர்வதேச ஆதரவோடு 80களில் தொடங்கினர். ஆனால் இப்போது மற்ற போராளிகளை கொன்றுவிட்டு, புலிகள் தன் முடிவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உலகத்தில் ஒரு நண்பரும் இல்லை. ஒரு காலத்தில் அமெரிக்க மாசசூசெட்ஸ் மக்களவையே ஈழ ஆதரவாக தீர்மானம் இயற்றினர்; இந்திய அரசு மற்றும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் எல்லா நண்பர்களையும் இழந்து அழிவின் விளீம்பில் நிற்கின்ரனர் என சிந்திக்கவும் - சிந்தனை செய்வதால் உங்களுக்கு காச நோயோ, புற்று நோயோ வராது என நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.ஜிஞ்ஜர்

document.write(tamilize('Thursday, May 07, 2009 4:02:00 AM'))
வியாழன், மே 07, 2009 காலை 4:02:00

=======================================

1 comment:

  1. ஜிஞ்சர் சரியான போடு இதுவரை இந்த நெடுமாறன் தமிழகத் தமிழர்களின் துயர்களுக்காக ஒருமுறை கூட குரல் கொடுத்தது இல்லை. அவர்களின் விவசாயம் பொய்த்து பட்டினியால் செத்தபோதும் சரி, கஞ்சித் தொட்டி திறந்து வாடியபொழுதும் சரி அல்லது எலிக்கறி சமைத்து தின்று காலத்தை கழித்தபொழுதும் சரி ஒரு முறைகூட குரலெழுப்பியதே இல்லை. இலங்கைத் தமிழருக்காக அல்ல விடுதலைப்புலிகளுக்காக மட்டும் குரல் கொடுக்க இவர் தமிழகத் தமிழர்களைப் பயன்படுத்துவார். தமிழகத்தமிழன் எக்கெடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை என்க்கு விடுதலைப் புலி ஆதரவு மட்டும் தான் முக்கியம் அதை வைத்தே காலத்தை ஓட்டும் பேர்வழி. இந்த மனிதரின் ஒரவஞ்சனை அரசியல் அதுவும் இங்கிருந்து கொண்டே செயல்படுத்தும் பேர்வழி.

    ReplyDelete